அப்துல்லாஹ் பயில்வான் (ரஹ்) அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை இதுதான் என்று காட்டி ஒன்பது புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். அந்த புத்தகங்களாவன,
1-ஈமானின் உண்மையை நீ அறி வாயா? (இரண்டாம் பதிப்பு 672 பக்கங்கள்)
2-ஏகத்துவம் பற்றி அல்குர்ஆன் (இ ரண்டாம் பதிப்பு 455 பக்கங்கள்)
3-பித்அத்துக்கு உண்மையின் சவுக்கடி பாகம்-1
4-பித்அத்துக்கு உண்மையின் சவுக்கடி பாகம்-2
5-திருக்குர்ஆன் தீர்ப்பு பாகம்-1 (இரண் டாம் பதிப்பு 227 பக்கங்கள்)
6-திருக்குர்ஆன் தீர்ப்பு பாகம்-2 (இரண் டாம் பதிப்பு 418 பக்கங்கள்)
7-திருக்குர்ஆன் தீர்ப்பு பாகம்-3 (சுன்னத்வல் ஜமாஅத்தினரை அறிந்து கொள்வது எப்படி?)
8-பகுத்தறிவின் நீதிமன்றம் (மூன்றாம் பதிப்பு 220 பக்கங்கள்)
9-ஏகத்துவப் பாடல்கள் (181 ஏகத்துவ ஞானப் பாடல்கள்)
அப்துல்லாஹ் பயில்வான் (ரஹ்) அவர்களைப் பற்றியோ அல்லது அவர் களைச் சார்ந்தோர்களைப் பற்றியோ ஒரு கல்விமான் பேச வருவாராயின், அவர் முதலில் அப்துல்லாஹ் பயில்வான் (ரஹ்) அவர்கள் என்ன கூறி யிருக்கிறார்கள் என்பதை அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்களைக் கொண்டு தெளிவாக ஆராய்ந்துவிட்டு வந்து சமூகத்திடம் விமர்சனம் செய்ய வேண்டும். ஆனால் பாமரர்கள் அப்துல்லாஹ் பயில்வான் (ரஹ்) அவர்களைப் பற்றியோ அவர்களின் நூற் கள், கொள்கை பற்றியோ எந்தவித விளக்கமும் ஆராய்வும் இல்லாமல் தாம் கேள்விப்பட்டுள்ளதையெல்லாம் உண்மை என்று நம்பி அத்வைதம், பயில்வானிஷம் இவையெல்லாம் இஸ்லாத்துக்கு விரோதமானவை என்றே பேசித் துற்றிக் கொண்டிருப் பார்கள்.
ஒருவர் அல்லது ஒரு கல்விமான் அப்துல்லாஹ் பயில்வான்(ரஹ்) அவர் களையோ அல்லது அவர்களின் கொள்கையையோ விமர்சிக்க முற் பட்டால் அப்துல்லாஹ் பயில் வான்(ரஹ்) அவர்கள் எழுதிய இன்ன புத்தகத்தின் இத்தனையாம் பதிப்பில் இன்ன பக்கத்தில் இப்படி எழுதி யிருக்கிறார்கள், இது அகீதாவுக்கு முரண், வழிகேடு என்று தம் அறிவுக்குத் தோன்றியதை அதற்கு குர்ஆன் ஹதீஸுகளை ஆதாரம் காட்டி எழுதியிருக்க வேண்டும். ஒரு கல்விமான் இப்படி ஆராய்ந்துதான் அதனை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுவார் என்பதை இவ்வுலக வரலாறு அறியும். ஒருவர் அப்துல்லாஹ் பயில்வான்(ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட ஒன்பது புத்தகங்களில் ஒன்றைக்கூட இன்னும் ஒரு தடவையேனும் வாசிக்காமல் அதனைப்பற்றி எள்ளளவும் அறிவும் இல்லாமல் தாம் கேள்விப்பட்டதைக் கொண்டு மட்டும் விமர்சிக்க முன்வரக்கூடாது. ஒரு நடுநிலைவாதி முதலில் எதிரியாயினும் அவர் என்ன சொல்லி யிருக்கிறார் என்பதை ஆராயந்துவிட்டு அதனை குர்ஆன் ஹதீஸு களுடன் உரசிப்பார்த்தே தீர்ப்புக் கட்டுவார். அதுவே ஒரு கல்விமானின் கடமை. பாமரர்கள் எதையும் பேசுவார்கள். அதைப்பற்றி எமக்கு கவலை ஒன்றும் இல்லை.
இஸ்லாத்தில் பல படித்தரங்கள் உண்டு. ஷரீஅத், தரீக்கத், ஹக்கீகத், மஹ்ரிபத் என்ற படிநிலைகளை குர்ஆன் விளக்குகிறது. மேலும் எகீனில் – ஈமானில் பல படித்தரங்கள் உண்டு. அவை இல்முல் எகீன்(102:5), ஐனுல் எகீன்(102:7), ஹக்குல் எகீன்(56:95), எகீன்(கமாலுல் எகீன்) என்றும் குர்ஆன் கூறுகிறது. அவற்றை படிப்படியாகவே கடக்க வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது,
084:19
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
(ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதாயிதிருக்கின்றது.
தரீக்காக்களை நல்லடியார்கள் உருவாக்கி இஸ்லாத்தின் இரண்டாம் படித்தரமான தரீக்கத்தில் மக்களை வழிநடத்திச் சென்றிருக்கிறார்கள். இது இறைவன் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் காரணமாக அல்லாஹ் வுடைய பாதையில் மனிதர்களைச் சேர்த்துவைக்க ஏற்படுத்தப்பட்ட வழிகாட்டலே ஆகும். ஆனால் பின்னால் வந்த பேத புத்தியுடைய மக்கள் தரீக்காக்களின் நோக்கத்தை திசை திருப்பி புரட்டி யிருக்கிறார்கள். தேவையற்ற வீண் வழிபாடுகளில் காலத்தை ஓட்டு கிறார்கள். இந்த தரீக்கத்தை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது,
072:16
وَأَن لَّوِ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ لَأَسْقَيْنَاهُم مَّاءً غَدَقًا
(நபியே! இந்த மனிதர்கள்) தரீக்கத்தில்(الطَّرِيقَةِ) உறுதியாக இருந்தால், தடையின்றியே அவர்களுக்கு நீரைப் புகட்டிக் கொண்டிருப்போம்.
004:168
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَظَلَمُوا لَمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيقًا
நிச்சயமாக நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்; அன்றி அவர்களை தரீக்கத்திலும்(طَرِيقًا) செலுத்த மாட்டான்.
ஆகவே அப்துல்லாஹ் பயில்வான்(ரஹ்) அவர்கள் ஒரு தரீக்காவை ஏற்படுத்தி இஸ்லாத்தில் முற்றிலும் நுழைவதற்கான படியை ஏற்படுத்தி அதற்கு “தரீக்கதுல் முப்லிஹீன்” என்று பெயர் சூட்டினார்கள். முப்லிஹீன் என்றால் வெற்றி பெற்ற நல்லடியார்கள் என்பது கருத்து. மற்றைய தரீக்காக்கள் அந்தந்த நல்லடியார்களின் பெயரையே கொண்டிருக்க இவர்கள் இந்த தரீக்காவுக்கு தன் பெயரையும் சூட்டாது வெற்றி பெற்றவர்களுடைய தரீக்கா என்று பெயர் சூட்டினார்கள். ஏனெனில் தரீக்கத்துடைய வழி அல்லாஹ்வுடையது. அதில் எவர் நுழைந்தாலும் அவர் ஹகீகத், மஹ்ரிபத்தை அடைந்து முப்லிஹீனாக, வெற்றி பெற்ற நல்லடியாராக ஆக முடியும். அதனாலேயே இதற்கு “தரீக்கதுல் முப்லிஹீன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
3:104
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவு பவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோர் (முப்லிஹீன்கள்-الْمُفْلِحُونَ-) ஆவர்.
அப்துல்லாஹ் பயில்வான்(ரஹ்) அவர்கள் இஸ்லாத்தின் மூலக்கொள்கை யான கலிமா புரட்டப்பட்டுள்ளது என்பதையும், அந்தக் கலிமாவின் பொருள் இதுதான் என்றும், இஸ்லாத்தின் கொள்கை ஏகத்துவக் கொள்கையே என்றும், அது ஓரிறைக்கொள்கை அல்ல என்றும், ஓரிறைக்கொள்கை அபூஜஹ்லின் கொள்கை என்றும், கலிமாவைக் கொண்டு சிராத்தில் பயணித்து நேர்வழியில் வாழ்ந்து இறைசன்னிதானத்தை அடைந்து கொள்வது எப்படியென்றும் தெளிவாக தம் நூற்களில் விளக்கியிருக் கிறார்கள். அவர்கள் புதிதாக ஒரு கொள்கையையும் கொண்டு வந்து அல்லது உருவாக்கி மக்களை அதன்பால் அழைக்கவில்லை. உலக மக்களுக்கு உள்ள கொள்கை ஒன்றே ஒன்றுதான் என்றும், அது ரசூல்(ஸல்) அவர்களால் தரப்பட்ட இஸ்லாம்தான் என்றும் நிறுவியிருக்கிறார்கள். தான் ரசூல் (ஸல்) அவர்களின் பாதத்தின் அடிமேல் அடிவைத்துச் செல்பவன் என்றே அடிக்கடி கூறுவது மட்டு மல்லாமல் தம் புத்தகங்களில் எழுதியும் வைத்துள்ளார்கள். இற்றைக்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, ரசூல் (ஸல்) அவர்களால் தரப்பட்ட இஸ்லாத்தின் மூலக் கொள்கையான கலிமாவின் பொருள் இதுதான் என்றும், அதனை மறுப்பவர்கள் உரிய முறைப்படி மறுப்பை எழுதுமாறும் தனது திருக்குர்ஆன் தீர்ப்பு இரண்டாம் பாகம் புத்தகத்தில் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்கள்.
அப்படியிருக்க அப்துல்லாஹ் பயில்வான்(ரஹ்) அவர்கள் என்ன கூறியிருக்கின்றார்கள் என்றே ஆராயாமலும், அவர்களது நூற்களை ஒரு தடவையேனும் பார்வையிடாமலும் எவராவது ஒருவர் இந்த தரீக்கதுல் முப்லிஹீனை நோக்கி “பயில்வானிஷம்” என்று அழைத்து இதனை ஒரு புதிய கொள்கையாக காட்டி ஏளனம் செய்ய முன்வருவார்களாயின் அவர்களைவிட சிந்தனையில்லாதவர்கள் உலகில் யாருமே இருக்க முடியாது.
இவ்விடத்தில் கீழ்வரும் ஆயத்துக் களையும் சிந்தனைக்கு எடுங்கள்,
23:109
إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
நிச்சயமாக என்னுடைய அடியார் களில் ஒரு பிரிவினர் “எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபை யாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” என்று பிரார்த்திப் பவர்களாக இருந்தனர்.
23:110
فَاتَّخَذْتُمُوهُمْ سِخْرِيًّا حَتَّىٰ أَنسَوْكُمْ ذِكْرِي وَكُنتُم مِّنْهُمْ تَضْحَكُونَ
அப்போது நீங்கள் அவர்களைப் பரிகாசத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டீர்கள், எதுவரை யெனின் என் நினைவே(திக்ரே) உங்களுக்கு மறக்கலாயிற்று; இன்னும் அவர்களைப் பற்றி நீங்கள் ஏளனமாக நகைத்துக் கொண்டும் இருந்தீர்கள்.
23:111
إِنِّي جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوا أَنَّهُمْ هُمُ الْفَائِزُونَ
நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்!”
என்று குர்ஆன் கூறிக்கொண்டிருக்கிறது.
அடுத்ததாக யாராவது ஒருவர் தமிழ் சொற்களின் கருத்தாழம் அறியாது அத்வைதம் அகீதாவுக்கு முரணானது, இஸ்லாத்துக்கு முரணானது என்றும் வழிகேடு என்றும் பேச முன்வருவது அவரின் அறிவின் தகமையையும் அனுபவமின்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.
அத்வைதம் என்றால் அ+துவைதம் அல்லது அ+துவிதம் என்பதன் புணர்ப்பே ஆகும். துவைதம் அல்லது துவிதம் என்றால் இரண்டு என்பது பொருள். ஒரு சொல்லுக்கு முன் புணர்ப்பில் “அ” சேரும்போது அது அச்சொல்லின் எதிர்ப் பொருளைத் தரும். உதாரணமாக திருப்தி-அதிருப்தி, சரீரம்-அசரீரம், ரூபம்-அரூபம், கண்டம்-அகண்டம், ஞானம்-அஞ்ஞானம் போன்ற சொற்களே விளக்கத்துக்கு போதுமானவை. ஆகவே துவிதத்தின் முன் “அ” சேரும்போது அது அத்துவிதம் அல்லது அத்வைதம் எனப்படுகிறது. ஆகவே துவிதம் இல்லாதது என்று பொருள் தருகிறது. அதாவது இரண்டில்லாதது எனப் பொருளாகிறது. ஆகவே அத்வைதம் என்பது இரண்டில்லாத ஏகம் என்ற பொருளைத் தருகிறது. இதன் ஒரே கருத்துடைய ஒத்த சொல்தான் ஏகத்துவம் என்பது. இரண்டற்ற ஏக தத்துவம் என்பதுதான் ஏகத்துவம். எனவே ஏகத்துவம் என்பதன் ஒத்த சொல்தான் அத்வைதம் என்பது. ஆனால் பல்வேறுபட்டவர்களும் மொழி யாற்றலில்லாமையால் தாம் நினைத்தவாறு இஸ்லாம் ஏகத்துவக் கொள்கை என்றும் அத்வைதக் கொள்கை வழிகேடு என்றும் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். இதற்கிடையில் இவர்களுக்கு இஸ்லாத்தின் கொள்கை ஏகத்துவக் கொள்கையா அல்லது ஓரிறைக் கொள்கையா என்பது தெரியாது. பரம்பரை பரம்பரையாக இஸ்லாம் ஓரிறைக் கொள்கை, ஏகத்துவக் கொள்கை என்று பேச்சுவழக்கில் கூறிக் கொண்டிருக்கிறோம். எதனையும் சிந்தியாமல் பாமரர்களாகவே இவ்வாறு பேசிக்கொண்டிருக் கிறோம். ஏகத்துவம் என்பதும் அத்வைதம் என்பதும் ஒரே கருத்துடைய சொற்களே என்பது தெரியாததால் இரண்டையும் ஒன்றுக் கொன்று எதிரான கொள்கைகளாக நம்பி பேசுகிறோம். இவை இரண்டுக்கும் முற்றிலும் எதிரான கொள்கைதான் ஓரிறைக்கொள்கை என்பதை அறியாமல் இஸ்லாம் ஏகத்துவக்கொள்கை அதுதான் ஓரிறைக் கொள்கை என்றும் நம்பி பாமரர்களாக பேசுகிறோம், எழுதுகிறோம். இந்த உண்மையை எப்போது எம் சமூகம் உணரப் போகிறதோ தெரியவில்லை.
இனி இஸ்லாம் என்பது ஓரிறைக் கொள்கையா என்பதை சிறிது நோட்ட மிடுவோம்,
ஓரிறைக்கொள்கை என்றால் என்ன?
ஒரு கடவுள்- ஒரு இறைவன்- ஒரு தெய்வம் உண்டு என்று நம்பும் கொள்கை. இதுவே ஓரிறைக் கொள்கை. இதனைத்தான் ரசூல்(ஸல்) அவர்கள் கொண்டுவந்தார்களா? அப்படியென்றால் அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் பல இறைவர்கள்- பல றப்புக்கள்- பல தெய்வங்கள் என்ற கொள்கையில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால்தான் நபியவர்கள் ஓரிறைக்கொள்கையை தந்திருக்க வேண்டும். ஆனால் குர்ஆனோ இதற்கு முற்றிலும் மாற்றமான கருத்தைக் கூறுகிறது! குர்ஆனை கையில் எடுத்துக்கொண்டு மேலும் கீழே வாசியுங்கள்.
அந்த மக்கத்து முஷ்ரிக்குகளின் கொள்கைதான் என்ன?
அல்லாஹ் ஒருவன் என்றும், அவன் வானத்தில் அர்ஷில் இருக்கிறான் என்றும், அவனே இறைவன்-றப்பு என்றும், அவனே அனைத்தையும் படைத்துப் போஷித்துக் காப்பவன் என்றும், அவனே வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்தியிருப்பவன் என்றும், அவனே எல்லாவற்றையும் பாதுகாப்ப வனாக இருக்கிறான் என்றும், எல்லாப் பொருட்களின் ஆட்சியும் வானத்தில் அர்ஷில் உள்ள அல்லாஹ் ஒருவனின் கையில் இருக்கிறது என்றும், அவனே இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலி ருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் என்றும், அவனே செவிப் புலன் மீதும், பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் என்றும், வணங்கப்படும் இலாஹுகளான சிலைகள் உட்பட ஏனைய அனைத்தும் சிருஷ்டிகள் என்றும், வணங்கப்படும் இலாஹுகளான சிலைகள் உட்பட சிருஷ்டிகள் யாவும் அல்லாஹ்வை விட்டும் வேறானவை என்றும், வணங்கப்படும் இலாஹுகளான சிலைகள் இறைவன் கிடையாது என்றும், வணங்கப்படும் இலாஹுகளான சிலைகள் எங்களை ஒரே இறைவனான-றப்பான அல் லாஹ்விடம் நெருங்கிச் சேர்க்கும் என்றும் கூறியவர்களே, நம்பியவர்களே அந்த மக்கத்து முஷ்ரிக்குகள். இதற்கு ஆதாரம் குர்ஆனே. பின்வரும் ஆயத்துக்களை நடுநிலைமையில் நின்று ஆராய்ந்து பாருங்கள். உங்கள் கைகளில் இருக்கும் குர்ஆனையே எடுத்துப் பாருங்கள்,
குர்ஆன் 23:86, 23:87, 43:9, 10:31, 23:84, 23:84, 23:88, 23:89, 29:61, 29:63, 31:25, 39:38, 43:87, 39:3….
23:86
قُلْ مَن رَّبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
“ஏழு வானங்களுக்கு றப்பும் (-நாயனும்-இறைவனும்-رَبُّ-) மகத்தான அர்ஷுக்கு றப்பும் (-நாயனும்-இறைவனும்-رَبُّ-) யார்?” என்றும் கேட்பீராக.
23:87
سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ أَفَلَا تَتَّقُونَ
“அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்க மாட்டீர்களா?” என்று கூறுவீராக!
ஆகவே முற்றுமுழுதான ஓரிறைக் கொள்கையில் இருந்தவர்களே அந்த மக்கத்து முஷ்ரிக்குகள். ஒரே இறைவன் அல்லாஹ்வே என்றும் சிலைகள் சிருஷ்டிகளே-படைப்புக்களே என்றும், அவையும், ஏனைய சிருஷ்டிகளும்-படைப்புக்களும் அல்லாஹ்வை விட்டும் வேறானவை என்றும், அவை ஏழு வானங்களுக்கப்பால் அர்ஷில் இருக்கும் அல்லாஹ் ஒருவனை நெருங்கிச் சேர்க்கவே அவற்றை எடுத்துக் கொண்டோமே ஒழிய வேறெதற்கும் அவற்றை வணங்கவில்லை அதாவது அவை றப்புக்கள்- இறைவன்கள் அல்ல வெறும் சிருஷ்டிகளே என்றும்தான் அந்த முஷ்ரிக்குகளின் கொள்கை இருந்தது என்று குர்ஆனே எமக்கு சான்று பகர்கிறது.
ஆகவே ஓரிறைக் கொள்கையில் இருந்த அந்த மக்கத்து முஷ்ரிக்குகளை எதிர்த்துத்தான் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் கலிமாவைக் கூறினார்கள், அத்தனை எதிர்ப்புக்கும் ஆளானார்கள். இந்தக்கலிமாவை ஓரிறைக் கொள்கையுடைய சமூகத்திடம்தான் அதற்கு எதிராக கூறினார்கள். இந்தக் கலிமாவை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் இத்தனை யுத்தங்கள் நடந்தேறின. இது ரசூல்(ஸல்) அவர்களுக்கு மட்டுமா என்று நோக்கினால் அனைத்து நபிமார்களுக்கும் இதுதான் நடந்தேறியிருக்கிறது. மீண்டும் குர்ஆனையே திறவுங்கள்,
எல்லா சமூகத்தவருக்கும் நபிமார் அனுப்பப்பட்டுள்ளதாக குர்ஆன் கூறுகிறது,
10:47
وَلِكُلِّ أُمَّةٍ رَّسُولٌ ۖ فَإِذَا جَاءَ رَسُولُهُمْ قُضِيَ بَيْنَهُم بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக் கிடையில் நியாயத்துடனேயே தீர்ப் பளிக்கப்படும் – அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
மேலும் எல்லா தூதர்களுக்கும் கொள்கை ஒன்றுதான் என்கிறது குர்ஆன்,
041:43
مَّا يُقَالُ لَكَ إِلَّا مَا قَدْ قِيلَ لِلرُّسُلِ مِن قَبْلِكَ ۚ إِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ وَذُو عِقَابٍ أَلِيمٍ
(நபியே!) உங்களுக்கு முன் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ, அதனைத் தவிர (வேறொன்றும்) உங்களுக்குக் கூறப்படவில்லை. (ஆகவே, இவர்கள் கூறும் நிந்தனைகளைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நிச்சயமாக உங்களது இறைவன் (நல்லவர்களை) மிக மன்னிப்பவனாகவும், (தீயவர்களைத்) துன்புறுத்தி வேதனை செய்பவனாகவும் இருக்கின்றான்.
17:77
سُنَّةَ مَن قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِن رُّسُلِنَا ۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا
திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக (சுன்னத்தாகவே)(لِسُنَّتِنَا) இருந்து வந்தது; நம்முடைய (இவ்)வழி முறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
33:62
سُنَّةَ اللَّهِ فِي الَّذِينَ خَلَوْا مِن قَبْلُ ۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا
அல்லாஹ் ஏற்படுத்திய வழி(سُنَّةَ-சுன்னத்) – இதற்கு முன் சென்ற வர்களுக்கும் இதுவேதான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில்(لِسُنَّةِ اللَّهِ-அல்லாஹ்வின் சுன்னத்தில்) எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
அத்துடன் அனைத்து தூதர்களினதும் கொள்கை கலிமாதான் என்கிறது குர்ஆன்,
021:25
وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ
உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக என்னைத் தவிர இலாஹு இல்லை(لَا إِلَٰهَ إِلَّا أَنَا); எனவே, என்னையே நீங்கள் இபாதத்துச் செய்யுங்கள்(ஏகமாக்குங்கள்)” என்று நாம் வஹீ அறிவிக் காமலில்லை.
இந்த குர்ஆனின் அசைக்கமுடியாத ஆதாரங்களிலிருந்து எல்லா சமூகத் துக்கும் நபிமார் உண்டென்றும், எல்லா நபிமார்களினதும் கொள்கை ஒரே கொள்கைதான் என்றும் அதில் மாற்றம் இல்லை என்றும் அந்தக் கொள்கை கலிமாதான் என்றும் குர்ஆனைக் கொண்டே விளங்கிக் கொண்டோம்.
எனவே ஆதம் (அலை) முதல் இறுதி நபி முகம்மது முஸ்தபா ரசூல்(ஸல்) அவர்கள்வரை அனைத்து நபிமாராலும் கொண்டுவரப்பட்ட கலிமா உணர்த்தும் உண்மையான கொள்கையே ஏகத்துவம் அல்லது அத்வைதம் என்பது. இது அபூஜஹ்ல் போன்ற முஷ்ரிக்குகளின் ஓரிறைக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது என்பதை குர்ஆனைக் கொண்டே விளங்கியறியலாம்.
இங்கே இன்னும் ஒரு விடயத்தைக் கூற வேண்டும். இணைவைத்தலை நீக்கவே கலிமா தந்ததாக அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் சிலைவணக்கத்தை நீக்கவே ரசூலுல்லாஹ் கலிமாவைத் தந்தார்கள் என்று சிலர் மக்களைக் குழப்புகிறார்கள். இவர்கள் இணை என்பது சிலை வணக்கம்தான் என்று மருண்டுவிடுகிறார்கள். ஆனால் குர்ஆனோ இதற்கு முற்றிலும் மாறான கருத்தை எடுத்தியம்புகிறது.
இணை-ஷிர்க்கிற்கு மன்னிப்பே இல்லை எனவும் அதுவல்லாத பாவத்திற்கு மன்னிப்புண்டு எனவும் தீர்ப்பிடுகிறது குர்ஆன்.
004:48
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்க மாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
ஆனால் மது அருந்துதல், சூதாட்டம், அம்பெறிந்து குறிகேட்டல் போன்ற பாவமே சிலைவணக்கம் என்றும் இவற்றை நீக்கிக் கொண்டால் வெற்றியடையலாம் என்றும் கூறுகிறது குர்ஆன். அதாவது மன்னிக்கப் படக்கூடிய பாவங்களுக்குள் சிலைவணக்கத்தையும் உள்ளடக்குகிறது குர்ஆன்.
005:90
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அரு வருக்கத்தக்க வேலைகளில் உள்ள வையாகும். ஆகவே, இவைகளி லிருந்து நீங்கள் விலகிக் கொள் ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற் றியடைவீர்கள்.
ஆகவே இணைவைத்தல் என்பது சிலைவணக்கத்தையும் விட மன்னிக்க முடியாத ஒரு பெரும்பாவம் என்கிறது குர்ஆன்.
அப்படியென்றால் இணைவைத்தல்-ஷிர்க்கு என்றால் என்ன?
ஆகவே இந்த இணைவைத்தல் என்றால் என்ன என்று தெரியாமல்தான் இன்றைய காலகட்டத்தில் அநேகர் அபூஜஹ்லின் ஓரிறைக் கொள்கையை இஸ்லாத்தின் கொள்கையாக திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே கலிமா உணர்த்தும் ஹக்கான உண்மை என்ன என்பதையும், ஷிர்க்கு என்றால் என்ன என்பதையும், கலிமாவைக்கொண்டு எப்படி ஷிர்க்கை நீக்கி அல்லாஹ்வுடைய பாதையில் பயணிக்கலாம் என்பதை யும்தான் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் ஆதாரத்துடன் தம் ஒன்பது நூற்களிலும் எழுதி நிறுவியிருக்கிறார்கள். அவர்கள் புதிதாக ஒரு கொள்கையைக் கொண்டு வரவில்லை. தன்னை மிஃராஜ் சென்றதாக கூறவில்லை. தன்னை ஒரு நபி என்று கூறவில்லை. தன்னை அல்லாஹ் என்றோ, இறைவன் என்றோ, றப்பு என்றோ கூறவில்லை. தன்னை ரசூல்(ஸல்) அவர்களைப் பின்பற்றும் ஒரு சுத்தமான மூமின் என்றுதான் கூறியிருக்கிறார்கள். எனவே, கலிமா உணர்த்தும் உண்மையான ஈமானின் உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள “ஈமானின் உண்மையை நீ அறிவாயா?” என்ற புத்தகத்தையும் அவர்களின் ஏனைய நூற்களையும் பக்கச்சார்பின்றி முதலில் பார்வை யிடுங்கள். எதனையுமே பார்க்காமல், வாசிக்காமல், ஆராயாமல் பிழை என்று பாமரர்களைப்போல் தீர்ப்புக் கட்டாதீர்கள். சரியோ பிழையோ என்ன கூறப்பட்டுள்ளது என்று முதலில் அறிந்துகொண்டு அதனை எதிர்த்து ஆதாரங்களுடன் பேசுங்கள். இதுவே ஒரு கல்விமானின் உயர் பண்பு.
உலமாக்கள் என்ற போர்வையில் உள்ள சிலர் 2004இலும், 2006இலும் கொள்கை அறியாத பாமர மக்களைத் தூண்டிவிட்டு மாபெரும் பொருள் சேதத்தை மட்டுமல்லாது உயிர் சேதத்தையும் இந்த தரீக்காவைப் பின்பற்றும் மக்களுக்கு ஏற்படுத்தினார்கள். குர்ஆனில் மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது என்று 2:256இல் தெளிவாக விளக்கப் பட்டிருந்தும் சாந்தி மார்க்கமான இஸ்லாத்தில் பாரிய வன்முறைகளைக் கையாண்டார்கள். மனித உரிமை மீறல்களை அரங்கேற்றினார்கள். அவர்கள் அன்று அப்துல்லாஹ்(ரஹ்) அவர்கள் புத்தகங்களில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று ஆராய்ந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டார்கள். வெறுமனே தாம் கேள்விப்பட்டுள்ளதை நம்பிக்கொண்டு பயில்வானிஷம் அகீதாவுக்கு முரணானது, அத்வைதம் அகீதாவுக்கு முரணானது வழிகேடு என்றெல்லாம் கூறி பாமர மக்களைத் தூண்டி ஏவிவிட்டு பாரிய வன்செயலைப் புரிந்தார்கள். இதற்கு தீர்ப்புநாளில் அல்லாஹ் முப்லிஹீன்களுக்கும் அவர்களுக்கும் தீர்ப்பளித்தே ஆவான். அதனை அவனிடமே பொறுப்புச் சாட்டிவிடுவோம்.
சாந்திக்குரிய மார்க்கமான இஸ்லாம் என்றுமே வன்முறையைக் கையாளச் சொல்லவும் இல்லை, மற்றையவர்களை இழிவாகக் கருதக் கற்றுத்தரவும் இல்லை. அப்படி நடப்பவர்கள் அனைவரும் மீண்டும் தாம் கற்றுக் கொண்டதை மீளாய்வு செய்து உண்மையான சாந்தி மார்க்கம், எதனையுமே நிர்ப்பந்திக்காத மார்க்கம், அமைதிக்குரிய மனித நேயத்தைப் பேணும் உன்னத மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை பகை உணர்வு, துவேஷ உணர்வுகளை விட்டும் நீங்கி கற்றுத் தெளிய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
Thareekathul Mufliheen